மஞ்சளாக மாறிய பிரித்தானிய நீரோடைகள்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
287Shares
287Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் Yorkshire நகர ஆறுகள் மஞ்சளாக மாறி வருவதற்கு அங்குள்ள ஆசிய உணவகங்களின் கழிவுகளே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவின் Yorkshire நகரமானது ஆசிய உணவகங்களால் பிரசித்திபெற்ற பகுதியாகும். ஆனால் இங்குள்ள கழிவு நீர் ஓடைகள் அனைத்தும் தற்போது உணவக கழிவுகளால் நிரம்பி உள்ளதாகவும்,

இதனால் Bradford பகுதியில் ஓடும் ஆறு ஒன்று கடும் மஞ்சளாக மாறியுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் Bradford பகுதி நண்பர்கள் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று விசாரணைக்கு இறங்கியுள்ளது.

நீரோடைகள் மஞ்சளாக மாறியுள்ள விவகாரம் தொடர்பில் பேசிய நபர் ஒருவர், யார்க்ஷயர் நகரத்தில் செயல்பட்டுவரும் உணவகங்கள் விதி மீறலில் ஈடுபட வாய்ப்பில்லை, ஆனால் அவர்கள் குறித்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்த தவறியுள்ளனர் என்றார்.

மட்டுமின்றி, பிரித்தானியாவில் தொழிற் புரட்சி ஏற்பட்ட காலகட்டத்தில், தொழிற் கூடங்கள் கழிவுகளை நேரடியாக பொதுமக்கள் பயன்படுத்தும் நீரோடைகளில் கொண்டு தள்ளியதை மறுக்க முடியாது என்றார்.

தற்போது குறித்த விவகாரம் பூதாகாரமான நிலையில் உணவகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதே தீர்வு எனவும், இதனால் தண்ணீரின் தரம் பாதுகாக்கப்படும் என்றார்.

யார்க்ஷயர் நகரின் பிராட்போர்டு பகுதியில் மட்டும் 200-க்கும் அதிகமான இந்திய, ஆசிய உணவங்கள் செயல்பட்டு வருகின்றன. பிரித்தானியாவின் Curry Capital என்ற விருதினை பிராட்போர்டு பகுதி 6 முறை வென்றுள்ளது.

மட்டுமின்றி, ஆசிய மக்கள் பெரும்பாலானோர் இங்கு குடியிருந்து வருகின்றனர். தொழிற் புரட்சி காலத்தில் பிராட்போர்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிக மக்கள் சக்தியை நாடியதே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்