ட்ரம்ப்- ஒபாமாவுக்கு கிடைக்காத கெளரவம்: இந்திய பெண்ணுக்கு கொடுத்த பிரித்தானிய இளவரசர்

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய திருமணத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை அழைத்துள்ளார்.

பிரித்தானியா ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க டி.வி சீரியல் நடிகையான மேகன் மோர்க்கலுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த திருமணத்திற்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும்,

அரசியல்வாதிகளின் அழைப்புகளைப் பொறுத்தவரை, யாரை அழைக்க வேண்டும் என்பது பிரித்தானியா அரசாங்கத்தோடு இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் மணமக்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ளப் போவதாகவும், ட்ரம்புக்கும் மணமகன் மற்றும் மண்மகள்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததால், அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

ஆனால் ஒபாமாவுக்கும் ஹரிக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இதை காரணம் வைத்து ஒபாமாவை திருமணத்திற்கு அழைத்தால் அரசாங்க ரீதியான உறவுமுறைகள் பாதிக்கும். இதன் காரணமாக, இருவருக்குமே அழைப்புகள் விடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதிகளான ட்ரம்ப்-ஒபமாவுக்கு கிடைக்காத வாய்ப்பு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சமையல் கலைஞர் ரோஸி கின்டாய்க்கு கிடைத்துள்ளது.

எப்படி என்றால் பிரித்தானியாவின் பெர்மிங்காம் பகுதியில் மிஸ் மேகரூன் என்ற பெயரில் பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனத்தை ரோஸி கின்டாய் நடத்தி வருகிறார்.

மணமக்களான ஹாரி- மோக்கல் ஒரு முறை இங்கு வந்து கேரூன் சாப்பிட்டுள்ளனர். அது மிகவும் பிடித்து போக ரோஸியை திருமணத்திற்கு அழைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்