கர்ப்பிணி பெண்ணை விமானத்தில் ஏற்ற மறுப்பு: அனுமதி பெற செய்ய வேண்டியவை

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

அயர்லாந்தில் கர்ப்பிணி பெண்ணொருவரை விமானத்தில் ஏற்ற அதிகாரிகள் மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Ryanair நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் Cork நகருக்கு செல்ல கர்ப்பிணி பெண்ணொருவர் விமான நிலையம் வந்தடைந்தார்.

ஆனால் விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. விமானத்தில் பறக்க உடல் தகுதியுடன் குறித்த பெண் உள்ளாரா என்பதற்கான மருத்துவர் கொடுத்த கடிதம் அவரிடம் இல்லாததால் விமானத்தில் அனுமதியில்லை என அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து, எந்த ஆபத்து வந்தாலும் நானே பொறுப்பு என கர்ப்பிணி பெண் கடிதம் எழுதி கொடுத்த நிலையில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் செல்ல வேண்டிய Cork நகருக்கு பதிலாக Dublin நகரிலேயே இறக்கிவிடப்பட்டார்.

விமான அதிகாரிகளின் செயலால் அதிருப்தி மற்றும் கோபமடைந்த பெண் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதனிடையில் Ryanair நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவிக்கையில், 28 வாரங்களை கடந்த கர்ப்பிணி பெண்கள் விமானத்தில் பறக்க உடல் தகுதியுடன் தாங்கள் உள்ளனரா என்ற கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் கடிதமானது பயணி, பயணிக்கும் திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் மருத்துவரால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்