காதலர் தின கொண்டாட்டம்: அதிகரிக்கும் பெண்கள் கருத்தரிப்பு சதவீதம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
331Shares
331Shares
lankasrimarket.com

காதலர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் வழக்கத்தை விடவும், கூடுதலாக 5 சதவீத பெண்கள் கருவுறுவதாக பிரித்தானியாவில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு வாரங்களில் அந்நாட்டில் கருவுற்றவர்கள் எண்ணிக்கை குறித்து அந்த அமைப்பு ஆய்வு செய்துள்ளது.

அதில், ஒவ்வொரு வாரமும், சராசரியாக 15,427 பேர் கருவுற்றுள்ளனர். ஆனால், காதலர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் 16,263 பேர் கருவுற்றுள்ளனர்.

அதேசமயம் கிறிஸ்துமஸ் வாரத்தில் 15,344 பெண்கள் கருவுற்றுள்ளனர். வழக்கமான வாரங்களை விடவும், காதலர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் அதிகமானோர் கருவுறுவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பெண்கள் பேறுகால நல திட்ட அமைப்பை சேர்ந்த சாரா ஜென் மார்ஷ்,

''காதல் என்பது அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் தம்பதியர், காதலர் தினத்தில் கூடுதலாக தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

ஓராண்டில் காதலர் தினம் கொண்டாடப்படும் வாரம், அடுத்த ஒன்பது மாதங்களில் கூடுதலாக குழந்தைகள் பிறக்க வழிகோலுகிறது.

இதன் மூலம் குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. 2018-ம் ஆண்டு பிறக்கும் குழந்தைகள் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளை விடவும் அதிக வலிமையுடன் பல ஆண்டுகள் வாழ நாங்கள் வாழ்த்துகிறோம்'' எனக் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்