தீப்பிடித்து எரியும் ஹெலிகொப்டர்: விபத்தில் தப்பிய பெண் நடந்து வரும் காட்சி

Report Print Athavan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்காவில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த பெண் பாதுகாப்பாக தப்பித்து நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

நண்பரின் பிறந்த தினத்தை அமெரிக்காவில் கொண்டாட இங்கிலாந்தை சேர்ந்த 6 நண்பர்கள் மற்றும் ஒரு பைலட் உடன் ஹெலிகொப்டரில் சென்றனர்.

நவேடா மாகாணத்தில் 600 அடி உயரத்தில் ஹெலிகொப்டர் பறந்த போது ஏற்பட்ட விபத்தில், ஹெலிகொப்டர் grand canyon எனும் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த சம்பவத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த Becky Dobson (27), சகோதர்களான JasonHill(32) மற்றும் Stuart Hill(30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

ஆனால் விபத்து நடந்து 9 மணி நேரம் கழித்து பள்ளத்தாக்கில் 50 கி.மீ புயலில் அவதியுற்ற பின்னர் புதிதாக திருமணம் ஆன தம்பதியர் Ellie Milward(29) மற்றும் Jonathan Udall(32) ஆகியோரை மீட்புக்குழுவினர் மீட்டு லாஸ் வேகாஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஹெலிகாப்டரை ஓட்டி சென்ற பைலட் Scott Booth(42) உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் Jennifer Barham(39) எனும் பெண் ஹெலிகொப்டர் பள்ளத்தாக்கில் விழுந்து தீ பற்றி எரியும் தருணத்தில் அதில் இருந்து வெளியேறி பள்ளத்தாக்கில் நடந்து வருவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.

பாதுகாப்பாக தப்பிய அந்த பெண் இங்கிலாந்து திரும்பிவிட்டதாகவும், கடும் அதிர்ச்சி காரணமாக சம்பவம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்து என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்