பிரித்தானிய விமான நிலையத்தில் பணிபுரிந்த பயங்கரவாதி: 17 பெயர்களில் அறியப்பட்டதும் கண்டுபிடிப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் பணிபுரிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல்வெறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குறித்த நபர் 17 பெயர்களில் அறியப்பட்டு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட ஹீத்ரோ விமான நிலையத்தின் ஓடுபாதை வரை சென்றுவரும் சிறப்பு அனுமதியும் அவர் பெற்றிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

முகமது அப்துல்லாஹ் முகமது என்ற 31 வயது நபர் 11 ஆண்டு கால குற்ற பின்னணி கொண்டவர் என கூறப்படுகிறது.

கொலை முயற்சி, கொள்ளை, பண முறைகேடு மற்றும் அடிதடி வழக்குகளிலும் இவர் பெயர் பதியப்பட்டுள்ளது.

மட்டுமின்றி 2015 ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்.

இதுவரை 5 ஆண்டுகள் பல்வேறு குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

எந்த வித பின்னணியையும் ஆராயாமல் குறித்த நபருக்கு ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் பணி உத்தரவு வழங்கியுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் 5 நாட்கள் பணி புரிந்த அவர் ஆண்டுக்கு சுமார் 89,000 விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் எண் 3-ல் சர்வசாதாரணமாக புழங்கியுள்ளார்.

ஆனால் தங்களிடம் அவரது குற்ற பின்னணியை மறைத்தே பணி நியமனம் பெற்றதாக விமான நிலைய அதிகாரிகள் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட முகமது மேலதிக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்