லண்டனில் நடந்த போராட்டம்..முகத்தில் அடுத்தடுத்து குத்திய பொலிசார்: வெளியான வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் முகத்தில் குத்துவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் வடக்கு பகுதியில் கடந்த மாதம் 27-ஆம் திகதி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

சிரியாவின் Kurdish நகரத்தின் மீது துருக்கி இராணுவம் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் போராட்டக்காரர் ஒருவரை பொலிசார் முகத்தில் தொடர்ந்து நான்கு முறை குத்துவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அவர் அந்த நபரை ஏன் அடித்தார், எதற்காக பொலிசார் அந்த நபரை கைது செய்தனர் என்பது தொடர்பான காரணம் தெரியவில்லை.

லண்டனில் குர்திஷ் மற்றும் துருக்கி மொழியில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் இது தொடர்பான வீடியோ குறித்து செய்தி கடந்த 4-ஆம் திகதி வெளியாகியிருந்ததாகவும், அதன் பின் இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்