பெண்ணை எரித்துக் கொன்ற தம்பதி: வெளிவந்த உண்மைகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், Franceஇன் Troyes பகுதியைச் சேர்ந்த 21 வயதான Sophie Lionnet என்னும் இளம்பெண், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக வேலைக்கு சேர்ந்த லண்டன் வீட்டில் எரித்துக் கொல்லப்பட்டார்.

பிணம் எரியும் நாற்றத்தை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, அங்கு வந்த பொலிசார் முற்றிலும் எரிந்து போன கரிக்கட்டையைத்தான் கைப்பற்ற முடிந்தது.

34 வயதான Sabrina Kouider என்னும் ஆடை வடிவமைப்பாளரும், அவரது கணவரான 40 வயது Ouissem Medouniயும் கைது செய்யப்பட்டனர்.

தாங்கள் கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்பட்டது யார் என்றும் தெரியாது என்றே இருவரும் கூறிவந்த நிலையில், நான்கு மாதங்களுக்குப்பின் இருவரும் உண்மைகளை ஒப்புக் கொண்டுள்ளனர்.

மார்ச் மாதம் 19ஆம் திகதி விசாரணை தொடங்க உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்