இளவரசர் ஹரியின் காதலி மெர்க்கல் தலைமுடியை அடிக்கடி ஏன் வருடுகிறார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதலியும், வருங்கால மனைவியுமான மெர்க்கல் தனது தலைமுடியை அடிக்கடி வருடுவது ஏன் என தகவல் வெளியாகியுள்ளது.

மேகன் மெர்க்கல் பொது வெளியில் வரும் போது அதிகளவில் தனது தலைமுடியை வருடுவார்.

இது குறித்து உடல்மொழி நிபுணர் பியான்கா கொப் கூறுகையில், பலர் தங்களை முடியை வருடுவது, நகத்தை கடிப்பது, கைகளை தேய்த்து கொள்வது போன்ற விடயத்தை செய்வார்கள்.

உளவியல் ரீதியாக சங்கடமான, மன அழுத்தமான நிலையில் இருக்கும் மனிதர்கள் அதை சமாளித்து அமைதியாக இவ்வாறு செய்வார்கள்.

பலர் போன் பேசுகையில், புத்தகம் படிக்கையில், டிவி பார்க்கையில் கூட இவ்வாறு செய்வார்கள்.

இது அவர்களுக்கே தெரியாமல் ஒட்டி கொண்ட பழக்கமாக இருக்கும். கமெராவுக்காக கூட சிலர் அப்படி செய்வார்கள். மேகன் உடல்மொழியை பார்க்கும் போது அவர் இதற்காக தான் அப்படி செய்கிறார் என நினைப்பதாக பியான்கா கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்