14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய மூன்று இளைஞர்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளி அவருக்கு போதை மருந்துகள் கொடுத்த மூன்று இளைஞர்களுக்கு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

நாட்டின் கோவண்ட்ரி நகரை சேர்ந்தவர்களான ஜேக் கேர்ன்ஸ் (21) பிரண்டன் ஷார்ப்லஸ் (20) மற்றும் ஜேக் மெக்னாலி (21) ஆகியோர் கடந்த 2015 யூன் மாதம் 8-ஆம் திகதி 14 வயது சிறுமி ஒருவரை கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவரின் வயது 18 என பொய்யாக கூறி இணையத்தில் சிறுமி விபச்சாரி என விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து 20 பேர் வரை சிறுமியுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளனர்.

சிறுமி காணாமல் போனது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் 2015 யூன் 13-ஆம் திகதி சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுப்பிடித்த பொலிசார் அவரை மீட்டு மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர்.

மூவர் மீதும் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கான தண்டனை விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கேர்ன்ஸ்க்கு எட்டாண்டுகள் சிறை தண்டனையும், பிரண்டன் மற்றும் மெக்னாலிக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு பத்தாண்டு பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் வாழ்நாள் குற்றவாளியாக கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்