கொடூரமாக கொல்லப்பட்ட பெண்: குற்றவாளியுடன் சிரித்து பேசும் புகைப்படம் வெளியானது

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

இங்கிலாந்தில் சினிமா பாணியில் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக கொலைக்காரனுடன் இளம்பெண் இயல்பாக சிரித்துகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் West Midlands பகுதியை சேர்ந்த ஆஷ்லி ஃபோஸ்டர்(வயது 24), மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இவர் மீது மேகன் பில்ஸ்(வயது 17) என்பவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 16ம் திகதி இக்கொடூர குற்றத்தை புரிந்துள்ளார் ஆஷ்லி ஃபோஸ்டர்.

கொலை செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு பின்னரே, துர்நாற்றம் வீசிய நிலையில் ஃபோஸ்டரின் குடியிருப்பில் இருந்து மேகனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இருவரும் சம்மதத்துடனே உறவு வைத்துக் கொண்டதாகவும், பாலியல் ரீதியான தாக்குதலின் போது அவர் இறந்ததாகவும் ஃபோஸ்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எதிர்தரப்பு, கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணறலால் இறந்துள்ளதாகவும், திரைப்படங்களில் வருவது போன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்றதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று இருவரும் சூப்பர் மார்க்கெட்டில் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது, அத்துடன் அன்றைய தினம் மேகன், போஸ்டரின் அறைக்கு செல்வது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்