வருங்கால பிரித்தானியா இளவரசியின் மூன்று மோதிரங்களின் ரகசியம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

இளவரசர் ஹரியின் வருங்கால மனைவி Meghan Markleஇன் நிச்சயதார்த்த மோதிரம் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் நேற்று Brixton க்கு வருகை தந்த அவர் தனது வலது கையில் மூன்று மோதிரங்களை அணிந்திருந்தார். அந்த மூன்று மோதிரங்கள் எதைக் குறிக்கின்றன?

கைரேகை நிபுணர்கள், பெரு விரலில் அணியப்படும் மோதிரம் உற்சாகப்படுத்துதல், கட்டுப்பாடு மற்றும் போராட்ட குணம் ஆகியவற்றைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

பெரு விரலில் மோதிரம் அணியக்கூடிய பெண், தனது நண்பர்கள் கூட்டத்தில் தலைவியாகவோ அல்லது தனது கணவனையும் குழந்தைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவளாகவோ இருப்பாள்.

ஆள் காட்டி விரலில் மோதிரம் அணிபவர்கள் புதிதாக பொறுப்பேற்ற ஒரு அரசர், ராணி அல்லது CEO ஆகவோ அல்லது பல மில்லியன் ரசிகர்களைக் கொண்ட வெற்றியை இலக்காகக் கொண்ட ஒரு பிரபலமாகவோ இருப்பார்கள் என்று ஒரு கைரேகை இணையதளம் தெரிவிக்கிறது.

Markle இரண்டு மோதிரங்களையும் அவர் வலது கையில் அணிந்துள்ளதால், அது பிடிவாத குணம் அல்லது பொது வாழ்வில் கட்டுப்பாடுடன் இருப்பதற்கு அடையாளம் என்று கைரேகை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேபோல் ஆள் காட்டி விரலில் மோதிரம் அணிந்திருந்தவர்களில் Queen Anne of Cleves, King Henry VII மற்றும் Queen Elizabeth I ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்