பிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து: 1,400 கார்கள் எரிந்து நாசம்

Report Print Santhan in பிரித்தானியா
2251Shares
2251Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் நடைபெறவிருந்த குதிரை கண்காட்சியின் போது, திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் 1,400 கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

பிரித்தானியாவின் Liverpool Echo Arena பகுதியில் உள்ள அரங்கு ஒன்றில் சர்வதேச குதிரைக்கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.

இதைக் காண வந்த மக்கள் தங்கள் கார்களை அருகில் இருந்த பல அடுக்கு கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தனர்.

அப்போது திடீரென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கார்களில் பரவியது.

இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களில் 1,400 கார்கள் எரிந்து சாம்லாகியுள்ளன.

அதுமட்டுமின்றி கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்ட 80 குதிரைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தின் காரணமாக குதிரைக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டதுடன் கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வாடகை வாகனம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் குதிரைகள் உட்பட யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்