பிரித்தானியாவில் அவமதிக்கப்பட்ட திருநங்கைக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கிய நியூசிலாந்து

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரித்தானிய நாட்டில் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டு அந்நாட்டை விட்டு வெளியேறிய திருநங்கைக்கு நியூசிலாந்து அரசு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கியுள்ளது.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 57 வயதான திருநங்கை ஒருவர் அந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்.

advertisement

லண்டனில் உள்ள மாணவர்கள் மட்டும் பயிலும் பாடசாலையில் பயின்றபோது தான் ஒரு திருநங்கை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.

பாலியல் மாற்றத்தால் மிகவும் வேதனைப்பட்ட அவர், 2002-ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டார்.

அப்போது, அவர் திருநங்கை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றார்.

‘இனிவரும் நாட்களில் பெண்களை போல் வாழ வேண்டும் அல்லது தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும்’ என தீர்மானித்துள்ளார்.

பின்னர், பெண்கள் உடுத்தும் ஆடைகளை அணிந்து பணிக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் திருநங்கை என தெரியவந்ததும் சக ஊழியர்கள் அவரை கிண்டலும் கேலியும் செய்து வந்துள்ளனர்.

ஒரு நிலையில் அவரது பணி பறிக்கப்பட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதுமட்டுமில்லாமல், திருநங்கை என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ள நிலையில் அவரால் வெளியே சுதந்திரமாக செல்ல முடியவில்லை.

மிகவும் வேதனை அடைந்த அவர் 2009-ம் ஆண்டு பிரித்தானிய நாட்டை விட்டு வெளியேறி நியூசிலாந்தில் உள்ள அவரது உறவினர்களுடன் சேர்ந்துள்ளார்.

ஆனால், நியூசிலாந்து நாட்டில் இனிமேல் வசிக்க முடியாது எனக் கூறி அவரை பிரித்தானிய நாட்டிற்கு திருப்பி அனுப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளது.

இநடவடிக்கைக்கு எதிராக திருநங்கை நியூசிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

பிரித்தானிய நாட்டிற்கு திரும்ப சென்றால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், மேலும் தன்னால் அவமானங்களை எதிர்க்கொண்டு வாழ முடியாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநங்கையின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் நியூசிலாந்து நாட்டில் நிரந்தரமாக வசிக்க அவருக்கு குடியிருப்பு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்