மகளின் முதல் மாதவிடாயை கையாண்ட தந்தை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares
Seylon Bank Promotion

எப்படி ஒரு தந்தை, தாயற்ற தனது மகளின் மாதவிடாயை கையாண்டார் என்பதை மிகவும் நகைச்சுசையாக மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

ஜன்ஸ்லே என்ற 21 வயது பெண், சிறுவயது முதலே தனது தந்தையால் வளர்க்கப்பட்டுள்ளார்.

இதனால் தனது வாழ்வில் எது நடந்தாலும் அதனை தனது தந்தையிடம் தான் முதலில் பகிர்ந்துகொள்வார். அவர் முதல்முறை மாதவிடாய் அடைந்தது உட்பட அனைத்தையும் கூறியுள்ளார்.

தனது மகளின் முதல் மாதவிடாயை எப்படிதான் கையாண்டேன் என ஜன்ஸ்லேவின் தந்தை கேரி, அனைவர் முன்னலையிலும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

என் மகளுக்கு 11 வயது இருக்கும்போதுபருவமடைந்தாள். அதனை வந்து என்னிடம் கூறியவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன், ஏனெனில் அவளை ஒரு ஆண் என்றே நான் எண்ணினேன்.

அவள் கால்பந்து பார்த்தாள், வீடியோகேம் விளையாடினாள், நின்றுகொண்டே சிறுநீர் கழித்தாள்.

காலை விழித்தெழுந்து தனக்கு மாதவிடாய்ஏற்பட்டதை என்னிடம் கூறினாள். அங்கேயே நில், நான் கடைக்கு போய் உனக்கு தேவையானதை வாங்கிவருகிறேன் என கூறிவிட்டு கடைக்கு சென்றேன்.

அங்கு என்ன வாங்குவென்பது எனக்குதெரியாது, அங்கிருந்த ஒரு பெண் எனக்கு விளக்கமளித்துசானிட்டரி, சில வலி நிவாரண மாத்திரைகள், சூடான தண்ணீர் பாட்டிலை என்னிடம் கொடுத்தாள்.

அதனை வாங்கிவந்து எனது மகளிடம்கொடுத்தேன் என கூறும் கேரி, அதன் பின்னர் மாடிக்கு சென்று சூடான தண்ணீரில் மாத்திரையினைபோட்டுவிட்டு நாங்கள் இருவரும் தூங்கிவிட்டோம் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்