ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் தினத்தில் விமானச் சேவைகள் ரத்தாகும் சாத்தியம்!

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் தினத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்- பிரித்தானியாவிற்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக நிதியமைச்சர் ஃபிலிப் ஹமண்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தங்கள் எதுவும் எட்டப்படாது பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில், இந்தவொரு சூழ்நிலையை எதிர்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான விமான போக்குவரத்து இடம்பெறுவது சந்தேகத்துக்குரியது எனக் கூறப்படுகிறது.

எனவே, அன்றைய தினத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திற்கோ பயணிக்க திட்டமிட்டிருந்தால், பயணிகள் சிரமங்களை எதிர்க்கொள்ளக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்