தீர்மானத்தை பரிசீலிக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்திய பிரித்தானிய பிரதமர்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
102Shares
102Shares
lankasrimarket.com

ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கை தொடர்பில் மறுபரீசிலனை செய்யுமாறு பிரதமர் தெரேசா மே அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.

2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஈரானுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை அமெரிக்கா நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையானது, பிராந்திய பாதுகாப்பிற்கு இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இது தொடர்பில் அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்நிலையில், நேற்று இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹுவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மே, ஈரான் உடன்படிக்கைக்கு தமது பூரண ஆதரவை உறுதிபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்