லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் ஐரோப்பிய ஏனைய இடங்களுக்கு நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு!

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் ஐரோப்பிய ஏனைய இடங்களுக்கு நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்பு!
0Shares
0Shares
Cineulagam.com

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றமானது, அமைதியான முறையில் பிரித்தானியாவுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என, ஸ்கொட்லாந்திலுள்ள ரோயல் வங்கித் தலைவர் Howard Davies தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால், லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் ஏனைய இடங்களுக்கு நகர்ந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எனவே, லண்டனிலுள்ள வேலைவாய்ப்புகள் வேறிடங்களுக்கு நகர்வதைத் தடுக்கும் நடவடிக்கையை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரெக்சிற் விவகாரத்தால், என்ன விளைவு ஏற்படும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. இது தொடர்பில் கம்பனிகளே கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த மூன்றாண்டு இடைக்கால பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகளை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்