லண்டனில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் பாய்ந்து விபத்து: பலர் காயம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
690Shares
690Shares
lankasrimarket.com

பிரித்தானிய தலைநகர் லண்டனில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் உள்ள தெற்கு கென்சிங்டன் பகுதியில் மிகவும் பழைமையான தேசிய வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

பரபரப்பு நிறைந்த இந்த பகுதியில் அருங்காட்சியகத்தின் அருகே உள்ள நடைபாதைக்குள் பாய்ந்த கார் ஒன்று மோதியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த வாடகை காரின் சாரதியை பொலிசார் உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் லண்டன் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் அருகே பாதசாரிகள் மீது காரை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

அதன்பின் யூன் மாதம் லண்டன் பாலம் அருகே நடைபெற்ற இதேபோன்ற மற்றொரு தாக்குதலில் 8 பேர் பலியாகினர்.

இன்றைய தாக்குதலுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெற்கு கென்சிங்டன் பகுதி ரயில் நிலையம், Victoria மற்றும் Albert அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்