பிரித்தானியா வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
151Shares
151Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் இந்த வாரம் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பொழியும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பிரித்தானியா வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென் மேற்கு பகுதி மற்றும் வேல்ஸில் பலமான காற்று வீச வாய்ப்புள்ளது.

தலைநகர் லண்டனில் ஒரு மணிநேரத்துக்கு 50 மைல் வேகத்திலும், மற்ற பகுதிகளில் 70 மைல் வேகத்திலும் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.

இதோடு இடியுடன் கூடிய மழை பொழியவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று 55லிருந்து 60 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அது இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வானிலை கணிப்பாளர் சார்லஸ் கூறுகையில், அட்லாண்டிகிலிருந்து வரும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக செவ்வாய் இரவிலிருந்து புதன் காலை வரை பலத்த காற்று வீசும்.

மேலும், புதன்கிழமை காலை மழை பொழிவதோடு, பிரித்தானியா மற்றும் வேல்ஸின் பல பகுதிகளில் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்துக்கு 70 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்