தாய் மற்றும் மகளை கொடூரமாக கொலை செய்த நபர் கைது

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் தாயார் மற்றும் அவரது மகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிய நபரை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று வந்துள்ளது.

தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், இருவரும் 66 வயதான தாயார் மற்றும் 33 வயதுடைய மகள் என தெரியவந்துள்ளது.

விசாரணையை வேகப்படுத்திய பொலிசார் நேற்று பிற்பகல் 2 மணியளவில் Joshua Cohen(27) என்ற நபரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த இரட்டைக்கொலைக்கு இவர் தான் காரணம் என சந்தேகித்துள்ள பொலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவ இடத்தில் ரோந்து பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரித்து இரட்டை கொலை தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்