வீடு புகுந்து கொள்ளை: செய்வதறியாது திகைத்த குடும்பம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் சொந்த வீட்டில் புகுந்து நபர் ஒருவர் கொள்ளையிடுவதை விடுமுறைக்கு சென்ற குடும்பம் 130 மைல் தொலைவில் இருந்து கண்காணித்துள்ளது.

பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் குடியிருந்துவரும் தம்பதி ஒன்று விடுமுறைக்காக சோமர்செட் பகுதிக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் அவர்களது வீட்டில் யாரோ அத்துமீறி நுழைந்துள்ளதாக கண்காணிப்பு கமெராவில் இருந்து எச்சரிக்கை அழைப்பு அவரது மொபைலில் வந்துள்ளது.

இதனையடுத்து அவர் தமது மொபைலில் இருக்கும் செயலியை ஓன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் இவர்களது நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய வீட்டின் உரிமையாளர் Donna Marusamy, தங்களது வீட்டில் நடந்த அந்த கொள்ளை சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. ஆனால் எங்களால் அதை பார்த்துக் கொண்டிருக்கவே முடிந்தது. நாங்கள் சுமார் 130 மைல் தொலைவில் இருந்தோம்.

ஆனால் சுதாரித்துக் கொண்ட அந்த தம்பதி உடனடியாக தமது உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

மட்டுமின்றி அப்பகுதி பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அந்த உறவினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் கொள்ளையன் அந்த நேரத்தில் நகை மற்றும் பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளான்.

கடந்த 4 ஆம் திகதி நடந்த இந்த கொள்ளையில் இதுவரை பொலிசாரால் கொள்ளையனை கண்டுபிடிக்க முடியவில்லை என Donna Marusamy தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்