லண்டனில் பேருந்து முன்பு பெண்ணை தள்ளிவிட்ட நபரின் சிசிடிவி காட்சி

Report Print Santhan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

லண்டனில் நபர் ஒருவர் ஜாகிங் சென்ற போது, அவ்வழியே வந்த பெண்ணை பேருந்தின் முன்பு தள்ளிவிட்டது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள Putney பாலத்தில் நபர் ஒருவர் ஜாகிங் சென்று கொண்டிருந்த போது, அந்த பாலத்தில் நடந்து வந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை அவர் கீழே தள்ளிவிட்டு சென்று விட்டார்.

இதில் அப்பெண் அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த பேருந்தில் சிக்காமல் உயிர்தப்பினார். இச்சம்பவம் கடந்த மே மாதம் 5-ஆம் திகதி நடந்துள்ளது.

இது தொடர்பான சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து கடந்த செவ்வாய் கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் 50 வயது மதிக்கத்தக்க Chelsea பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரை பொலிசார் விசாரணை மேற்கொண்டு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பெண்ணை தள்ளிவிட்ட நபர், தள்ளிவிட்ட சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அந்த பாலத்தின் வழியே வந்துள்ளார்.

இது குறித்து அப்பெண் பேச முயற்சித்த போது, அந்த நபர் எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டதாகவும், டிரைவரின் சாமர்த்தியத்தால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்