பிரித்தானியாவை அதிர வைத்த நஞ்சு கோழி முட்டை: இரண்டு பேர் கைது

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

நஞ்சு கோழி முட்டை ஊழல் தொடர்பாக,பெல்ஜியத்திலும், நெதர்லாந்திலும் இரண்டு கம்பனி நிர்வாகிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஊழலுக்கு மூல காரணமான பெல்ஜியத்தின் Poultry Vision நிறுவன முதலாளிகளின் சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளன.

நெதர்லாந்து கோழிப் பண்ணைகளில் பேன் அழிக்கும் கிருமிநாசினி Filronil கோழி முட்டையில் கலந்திருந்த படியால், பிரித்தானியா உட்பட பல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கோழி முட்டை விற்பனை நிறுத்தப்பட்டது.

சுமார் 7,00,000 நஞ்சு முட்டைகள் பிரித்தானியாவிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் முட்டைகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஆனால், பிரித்தானியாவில் தயாரித்த 85 சதவீத முட்டைகளையே பிரித்தானியார்கள் உட்கொண்டு வருவதாக உணவு தரநிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால், பொது சுகாதாரத்திற்கான ஆபத்து உள்ளது என்பது மிகவும் குறைவு என குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் முட்டைகளில் நஞ்சு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, கைது செய்யப்பட்டுள்ள இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்