பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியா தலைநகர் லண்டனில் 24 மணிநேரத்தில் இரண்டு சிறுவர்கள் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய் இரவு Georgia Road, Green Lane-வுடன் சந்திப்புக்கு அருகில் 15 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவயிடத்திற்கு பொலிசார் விரைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக லண்டனின், Peckham பகுதியில் வைத்து 19 வயதுடையவர் குத்திக்கொல்லப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகர் லண்டனில் 24 மணிநேரத்தில் இரண்டு பேர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்