முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா
201Shares
201Shares
lankasrimarket.com

முள்ளிவாய்க்கால் தமிழீழ தேசிய துக்க தின நினைவேந்தல் நிகழ்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மிதிவண்டி கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் குருதிக்கொடை நிகழ்வுகள் 3ஆவது நாளாகவும் பிரித்தானியாவில் நடைபெற்று வருகிறது.

மே 14ம் திகதி KINGSTON பகுதியில் காலை 7 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான பயணத்தில் மிதிவண்டி கவனயீர்ப்பாளர்கள் பொதுமக்களிடம் பரப்புரை செய்தபடி TWICKENHAM, RICHMOND, SOUTHALL, HAYES, SLOUGH, MAINHEAD, BEACONSFIELD, HIGHWYCOMBE, PRICESS RISBOROUGH, SHAME, BICESTER, BANBURY ஊடாக BIRMINGHAM வந்தடைந்தனர்.

இதன்போது, துண்டுப்பிரச்சுரங்களை வழங்கிய வண்ணம் கவனயீர்ப்பாளர்கள் பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட “உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வில் Tooting Donation Centreஇல் 30இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், 4ம் நாள் BIRMINGHAMஇல் இருந்து ஆரம்பித்து MILTON KEYNES இல் நிறைவடையும், இரத்ததான நிகழ்வானது TOOTING DONATION CENTRE மற்றும் THE GRAND FOLKESTONE ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்