கவர்ச்சியான திருமண மாளிகைகள்: எங்குள்ளது தெரியுமா?

Report Print Printha in சுற்றுலா
394Shares
394Shares
Seylon Bank Promotion

திருமணத்தை வித்தியாசமான முறையில் அல்லது மிக பிரம்மாண்டமாக செய்ய அனைவருமே விரும்புவார்கள். அந்த வகையில் இந்தியாவில் மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் எங்குள்ளது என்பது குறித்து இப்போது காண்போம்.

உமைத் பவன் மாளிகை

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உமைத் பவன் எனும் மாளிகை உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது.

தாஜ் ராம்பாக் மாளிகை

ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் எனும் மாளிகை, ஜெய்ப்பூர் மகாராஜாவினால் கட்டப்பட்டது.

அது தற்போது சொகுசு விடுதியாக செயல்படுகிறது. இந்த மாளிகை ஜெய்ப்பூரிலிருந்து 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.

சிட்டி மாளிகை

சிட்டி மாளிகை உதய்ப்பூரில் அமைந்துள்ள இந்தியாவின் மிக பிரம்மாண்டமான மாளிகைகளுள் ஒன்றாகும்.

இதன் கட்டுமானம் 1553ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் மகாரானா உதய் சிங் என்பவர் இந்த மாளிகையை கட்டினார்.

ஃபலக்னபா மாளிகை

ஃபலக்னபா மாளிகை எனும் அரண்மனை ஹைதராபாத்தில் உள்ள அழகான இடங்களில் ஒன்றாகும். இது பைஹா ஹைதராபாத் மாநிலத்தினைச் சேர்ந்தது, பின் நிசாம்களுக்கு சொந்தமானதாக இருந்தது.

32 ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இந்த பேலஸ் சார்மினாரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மாளிகையை கட்டியவர் நவாப் விகர்-உல்-உமர் ஆவார்.

ஹாவ்லாக் தீவு

ஹாவ்லாக் எனும் தீவு அந்தமானில் அமைந்துள்ளது. இந்த தீவு பகுதி திருமணம் செய்வதற்கு மிகச் சிறந்த இடமாகும்.

லட்சுமி விலாஸ் மாளிகை

குஜராத் மாநிலத்தில் வதோதராவில் லட்சுமி விலாஸ் எனும் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையை மகாராஜா சாயாஜிராவ் என்பவர் கட்டியுள்ளார்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்