பல இலட்சம் மண்டை ஓடுகளால் உருவான மர்மகுகை!

Report Print Kavitha in சுற்றுலா
0Shares
0Shares
lankasrimarket.com

60 லட்சம் மனிதர்களின் எலும்புகளால் ஆக்கப்பட்ட இக்குகை பாரிஸில் அமைந்துள்ளது. இக்குகை "கேட் ஆஃப் ஹெல் என்று அழைக்கப்படுகின்றது.

இது உலகின் மிகப்பெரிய கல்லறை என்று கூறப்படுகின்றது.

இது பாரிஸ் சுரங்கப்பாதை நெட்வொர்க்கின் பண்டைய சுரங்கங்களில் ஒரு சிறிய பகுதியில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் எலும்புக்கூடுகள் எஞ்சியுள்ளதாக உள்ளது.

நிலத்தடி கல்லறை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒரு சிறிய அளவிலான சுற்றுலாத் தலமாக மாறியது.

சுற்றுலாப்பயணிகளை கவர்ந்தவொரு இடமாக இக்குகை காணப்படுகின்றது. இக்குகையை மர்மக்குகை என்று இக்குகை 60 அடி ஆழத்தில் அமைந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இக்குகையை முழுவதும் பார்வையிட 45 நிமிடங்கள் தேவை என்றும் ஒரு முறைக்கு 200 பேரை மட்டும் தான் உள்ளே அனுமதிப்பார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது.

இக்குகை 1874 ஆம் ஆண்டு முதல் முறையாக பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக இது காணப்படுகின்றது.

இக்குகை ஆரம்பக்காலக்கட்டத்தில் யுத்தத்தின் போது இறந்த வீரர்களின் உடல்கள் மற்றும் தொற்று நோய்க்குட்பட்டு இறந்தவர்களில் உடல்கள் வீதிகளிலும் கல்லறைகளிலும் நிறைந்து காணப்பட்டன. இதனால் இக்குகையில் இடப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்குள்ள மன்னருக்கு இது தெரிய வரவே நிலத்துக்கு அடியில் இருக்கும் சுண்ணாம்புக்குகைகளில் இந்த இறந்த உடல்களை வைக்கும்படி மன்னர் ஆணையிட்டார்.

கி.பி 1774 ஆம் ஆண்டில் கல்லறையில் இருந்த உடல்களை இந்த குகைக்கு மாற்றினர். அன்றிலிருந்து இந்தப் பழக்கம் தொடர்ந்து வழக்கத்தில் இருந்துள்ளது.

இவ்வாறு இவர்கள் பிற்காலத்தில் கல்லறை மற்றும் தேவாலயங்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் மற்றவர்களின் எலும்புகளையும் மொத்தமாக அந்தக் குகைகளுக்கே கொண்டு வந்தார்கள் கொண்டு வந்தது குவித்தார்கள் 60 இலட்சம் மனிதர்களில் எலும்புக்கூடுகள் கொண்டு இங்கு இக்குகை பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றது.

இன்று இது உலகில் மிகப் பெரிய கல்லறையாக இது மாறியுள்ளது. எலும்புகளையும் மண்டையோடுகளையும் அற்புதமாக அடுக்கி வைத்து கலைப் படைப்பை உருவாக்கியுள்ளனர்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்