கடவுளும், பேயும் ஒரே குகையில் உள்ள அதிசயம்: எங்கு தெரியுமா?

Report Print Printha in சுற்றுலா
0Shares
0Shares
lankasrimarket.com

கர்நாடக மாநிலத்தில் நெல்லி தீர்த்த சோமேசுவரர் எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது, உலகப் புகழ் மிக்க இந்த குகை 1487-ல் கட்டப்பட்டது.

200 மீட்டர் வரை நீளத்தில் உள்ள இந்த குகைக்குள் மாலை 6 மணிக்கு மேல் கோட்டை முற்றிலும் இருள் சூழ்ந்த பின் தீப்பந்தத்தின் உதவியுடன் தான் செல்ல முடியுமாம்.

ஒரு வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே பக்தர்கள் இங்கு செல்ல முடியுமாம். ஏனெனில் இந்த குகை வருடம் முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பதால், குளிர்ந்த காற்று அதிகமாக வீசுமாம்.

இந்த குகைக்குள் வழிந்தோடும் நதியின் ஒரு பகுதி தித்திப்பாகவும், நெல்லிக்கனி சுவையுள்ளதாகவும் இருக்குமாம், அதனால் நெல்லித் தீர்த்தம் என்று இந்த கோவிலை அழைக்கின்றனர்.

முனிவர் இட்ட சாபத்தால் உருமாறிய அசுரனை அழிக்க சிவபெருமான் இங்கு வந்ததாக கூறுகின்றனர். இந்த பகுதியை ஆட்சி செய்த மாமன்னர் ஒருவர் இந்த கோயிலுக்கு தவறாமல் வருகை தந்து பூஜை செய்வாராம்.

ஒரு ஆள் நுழையும் அளவு உள்ள இந்த கோவிலின் வாசலில் நுழைந்தால், அதனுள் சென்று இருள் சூழ்ந்த சில கடினமான பகுதிகளையும் கடக்க வேண்டுமாம்.

இந்த கோவிலில் உள்ள சிவன் லிங்கம் சாலிக்ராம படிகங்கள் எனும் அரிய வகை கற்களால் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

அங்குள்ள குளத்தில் இறங்கி குளித்து விட்டு போனால் அவர்களுக்கு ஒரு பலம் வருமாம். அப்படியே கோயிலுக்குள் செல்லும் போது கடவுளின் அருள் கிட்டும் என்று கூறப்படுகிறது.

இந்த குளத்தில் இறங்கி விட்டு நீரைத் துடைக்காமல் அப்படியே செல்பவர்களை, அந்த குளத்தின் நீர் பேயிடம் இருந்து காப்பாற்றுவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

சிவபெருமானின் தீவிர பக்தரான அந்த மாமன்னரின் ஆவி இங்கேயே சுற்றிக் கொண்டு அங்கு வரும் பக்தர்களை துன்புறுத்தி வருவதாக கூறுகின்றனர்.

ஆனால் இந்த குகைக்கு இரவு நேரங்களில் யாரும் வர மாட்டார்களாம், வருடத்தில் ஆறு மாதம் சிவபெருமானுக்கு முனிவர்கள் பூஜை செய்வார்களாம்.

அப்போது அமானுஷ்ய சக்திகள் இங்கு வரும் பக்தர்களை மிரட்டுமாம். மேலும் இந்த குகைக்குள் நண்டு, பாம்பு, பன்றிகள் மற்றும் பாம்புகள் ஆகியவை உள்ளது. இவை அனைத்தும் கடவுளின் வாகனமாக கூறப்படுகிறது.

இந்த குகையில் உள்ள பாம்புகள் பக்தர்களை கடித்து விட்டால் அவர்களுக்கு எதுவும் ஆவதில்லை என்கின்றனர்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்