சீனாவின் அதிரடி நடவடிக்கை: எரிபொருளில் இயங்கும் கார்களுக்கு தடை!

Report Print Givitharan Givitharan in போக்குவரத்து
56Shares
56Shares
lankasrimarket.com

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சீனா உலகின் மிகப்பெரிய கார் சந்தையாக விளங்கி வருகின்றது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் உலக கார் உற்பத்தியில் 30 சதவீதத்தினை சீனா கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எரிபொருளில் இயங்கும் கார் உற்பத்தியில் மட்டுமன்றி இலத்திரனியல் கார் உற்பத்தியிலும் சீனா முன்னணி வகிக்கின்றது.

2016 ஆம் ஆண்டு மதிப்பின் படி சீனாவில் 336,000 இலத்திரனியல் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவில் இதே வருடத்தில் 159,620 இலத்திரனியல் கார்களே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் சுவட்டு எரிபொருட்களில் இயங்கும் கார்களுக்கு தடை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவட்டு எரிபொருட்களின் பற்றாக்குறை மற்றும் சூழல் மாசடைதலைக் கருத்தில் கொண்டு இவ்வாறன முடிவுக்கு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்த தகவலையும் சீன அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் போக்குவரத்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்