யு.எஸ். ஓபன்: ரபேல் நடால் சாம்பியன்

Report Print Arbin Arbin in ரெனிஸ்
0Shares
0Shares
lankasri.com
advertisement

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது இந்த ஆண்டில் கடைசி கிராண்ட் கிராண்ட்ஸ்லாம் தொடர் யு.எஸ்., ஓபன் டென்னிஸ்.

advertisement

இதன் இறுதிப் போட்டியில், உலகின் நம்பர்-1 வீரரான ஸ்பெயினின் நடால் மற்றும் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதினர்.

இதில் முதல் செட்டை 6-3 என நடால் எளிதில் கைபற்றினார். அடுத்த இரு செட்களையும் நடால் 6-3, 6-4 என தனதாக்கினார்.

முடிவில், 6-3, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று யு.எஸ்., ஓபன் பட்டத்தை 3வது முறையாக கைபற்றினார் நடால்.

இந்த போட்டி 2 மணி 30 நிமிடங்களில் முடிந்தது. இது நடால் வெல்லும் 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்