வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகின்றது அட்டகாசமான வசதி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
86Shares
86Shares
lankasrimarket.com

மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ்ந்து வரும் மெசேஜ் அப்பிளிக்கேஷனான வாட்ஸ் ஆப் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வாட்ஸ் ஆப் ஆப்பிளிக்கேஷனின் உள்ளேயே பார்த்து மகிழ முடியும்.

இதற்கு முன்னர் குறித்த வீடியோக்களை வாட்ஸ் ஆப்பினூடாக ஷேர் செய்யும்போது பிரத்தியேகமாக அந்தந்த தளங்கள் திறக்கப்பட்ட பின்னரே வீடியோவினை பார்வையிடக் கூடியதாக இருந்தது.

எனினும் தற்போது iOS சாதனங்களுக்கான ஆப்பிளிக்கேஷனில் மாத்திரமே இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், Android சாதனங்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யூடியூப் வீடியோக்களை வாட்ஸ் ஆப் ஆப்பிளிக்கேஷனின் உள்ளே பார்வையிடும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்