மாணவர்களை தவறாக வழிநடத்திய யூடியூப் சேனல்களுக்கு நேர்ந்த கதி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

கோடிக்கணக்கான வீடியோக்களை தன்னகானதாக கொண்ட யூடியூப் தளம் தொடர்ந்தும் வீடியோ பகிரும் தளங்களில் முன்னணியில் திகழ்ந்து வருகின்றது.

இத்தளத்தில் அன்றாட செயற்பாடுகள் பலவற்றினையும் எவ்வாறு இலகுவான வழிகளில் செய்ய முடியும் என்பன தொடர்பிலும் பல வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இவ் வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றுவருகின்றன.

இதேபோன்று பாடசாலை மாணவர்கள் எவ்வாறு தமது பள்ளி வேலைகளில் ஏமாற்று வித்தைகளை புகுத்துவது என்பது தொடர்பிலும் ஏராளமான வீடியோக்கள் காணப்படுகின்றன.

இவ்வாறான வீடியோக்களை கொண்ட சேனல்கள் பல அண்மையில் யூடியூப் நிறுவனத்தினால் அழிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 250 சேனல்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சேனல்களை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த EduBirdie எனும் நிறுவனமே நடாத்தி வந்ததாகவும், இது தொடர்பில் பிபிசி நிறுவனம் விசாரணை ஒன்றினையும் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ் வீடியோக்கள் சுமார் 700 மில்லியன் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்