சுவிற்சர்லாந்து கடவுச்சீட்டு விதிகளில் அமலான புதிய நடைமுறை

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்தில் பிறந்த திகதி தெரியாத நபர்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையில் 00.00 என பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் இனியும் பாகுபாடு காட்டமுடியாது என தெரிவித்துள்ள அரசாங்கம், கற்பனையான திகதியை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் எல்லைச் சோதனை மற்றும் ஆன்லைன் பொருட்கள் வாங்கும் போது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

குறிப்பாக அகதி அந்தஸ்து கோரும் நபர்களால் தங்களது சரியான பிறந்த திகதி கொண்ட ஆவணங்களை சமர்பிக்க முடியாத சூழல் உள்ளது.

எனவே இனிமேல் 00.00 க்கு பதிலாக கற்பனையாக திகதியை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்று ஆவணங்களில் உள்ளவர்கள் திகதி மாற்றிக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அனைத்தும் 2018ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்