சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர சுவிட்சர்லாந்து அரசு வலியுறுத்தல்

Report Print Athavan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவில் அமெரிக்காவின் தலைமையிலான வான்வழித் தாக்குதல்கள் குறித்து பேசிய சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் Ignazio Cassis அங்கு நடைபெறும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று சுவிஸ் தலைநகர் Bernல் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சுவிஸ் அரசு பொதுவாகவே எந்த ஒரு ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காது எனவே அதன் அடிப்படையில் சிரியாவில் மேற்கு நாடுகளின் கூட்டுபடைகள் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை நாங்கள் வரவேற்கவில்லை என்று தெரிவித்தார்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை அல்லது ராஜதந்திர ரீதியில் தான் தீர்வு காண வேண்டும் என்பது தான் சுவிஸர்லாந்தின் கொள்கை.

ஆகவே சிரியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளும் சிரியா மக்களின் நலன் கருதி விரைவில் அங்கு நடைபெற்று வரும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

ரசாயன ஆயுதங்கள் போரில் பயன்படுத்தப்படுவதை நாங்கள் என்றும் எதிர்கின்றோம். ஆனால் சிரியா விவாகரத்தில் சுவிஸ் எச்சரிக்கையாகவே செயல்படும்.

ஏனெனில் சிரியாவில் அதிபர் ஆசாத் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினார் என்ற வகையில் ஊகங்கள் வந்து கொண்டு இருக்கிறதே தவிர ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது தொடர்பாக இன்னும் உண்மை தெரியவில்லை என்று அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் Ignazio Cassis தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது சிரியா விவகாரத்தில் எந்த அணிக்கும் ஆதரவு அளிக்காமல் சுவிட்சர்லாந்து அரசு நடுநிலை வகிக்கவே விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்