ஆறு மாதங்களுக்கு முன் ஜேர்மனியில் காணாமல் போன நாய்: சுவிசில் கிடைத்த அதிசயம்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நாய் ஒன்று தற்போது சுவிசில் கிடைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச்- விண்டர்ட்ஹர் இணைப்பு சாலையான A1 நெடுஞ்சாலை ஊழியர்கள், நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நாய் ஒன்றை கவனித்துள்ளனர்.

அதுகுறித்து உடனடியாக சூரிச் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசரகால ஊர்தியை நம்பி காலம் தாழ்த்தாமல் பொலிஸ் வாகனத்திலேயே நாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நாயை பரிசோதித்த மருத்துவர்கள், மிகவும் ஆபத்தான நிலையில், பல மைல்களை கடந்து வந்துள்ளதால் சில எலும்புகளில் முறிவும் உள்காயங்களும் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியின் Frankfurt நகரத்தில் காணாமல் போன ஜேர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த Rapunzel(வயது 8) என்ற நாய் தான் தற்போது கண்டெடுக்கப்பட்ட நாய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனடியாக நாயின் உரிமையாளரை தொடர்புகொண்ட பொலிசார், நடந்த விவரத்தை தெரிவித்துள்ள நிலையில் அவர்களும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

மேலும், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ள அந்த நாய்க்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்