திருடிய பணத்தை திரும்ப தர மறுத்த திருடன் செய்த செயல்

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் திருடிய பணத்தை திரும்ப தர மறுத்த திருடன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Aargau மாகாணத்தில் செயல்பட்டு வரும் பண்ணை கடை(Farm Shop) ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் 200 பிராங்குகள் அளவு பணம் திருடு போயுள்ளது.

பணம் திருடப்பட்ட அன்று கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி கெமரா காட்சிகள் மூலம், பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து தெரியவந்துள்ளது.

ஊதா நிற ஹூடி அணிந்த நபர் பணத்தை திருடிச் செல்லும் அந்த காட்சிகள் மூலம் திருடனை பிடிக்க கடை உரிமையாளரின் குடும்பம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் திருடிய நபரை பிடித்துள்ளனர்.

ஆனால் அந்த நபர் தான் திருடியதை ஒப்புக்கொள்ளாமல், மாறாக என்னிடம் நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

பணத்தை மட்டும் திரும்ப தந்தால் போதும், உன் மீது எந்த வழக்கும் வராது என கடை உரிமையாளரின் குடும்பம் பலமுறை கூறியும் அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து திருடன் மீது பொலிசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்