சுவிட்சர்லாந்தில் காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Thurgau மாகாணத்தின் Zezikon அருகே உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக கடந்த ஜனவரி 25-ஆம் திகதி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சாக்குப் பையில் அடைக்கப்பட்டிருந்த சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில், கடந்த நவம்பர் 12-ஆம் திகதியன்று காணாமல் போன இஸபெல்லா என்னும் 20-வயது பெண்ணின் உடல் என்பது தெரியவந்துள்ளது.

இஸபெல்லாவின் படுகொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் சரியாக இல்லாததால் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிறிஸ்துமஸ் திகதியில் வாகனத்தில் வந்த சிலர் இஸபெல்லாவின் உடலை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல்கள் கிடைத்தால் உடனடியாக Thurgau பொலிசாருக்கு 058 345 22 22- என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கும்படி பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்