நள்ளிரவில் நடந்த சம்பவம்: நூலிழையில் உயிர் தப்பிய நபர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி காட்டி மிரட்டி கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸல் மாகாணத்தின் Lower Rebgasse பகுதியில் குறித்த குற்றச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நபர் கொள்ளையர்களிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

பாஸல் மாகாணத்தின் Lower Rebgasse பகுதியில் வியாழனன்று நள்ளிரவு 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத 2 பேர் பாதிக்கப்பட்ட 25 வயது நபரை அணுகியுள்ளனர்.

பின்னர் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் மொபைல் போனை கொள்ளையிட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்து விரைந்த இருவரும் எங்கே மாயமானார்கள் என தெரியவில்லை என பாதிக்கப்பட்ட நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளித்த குறித்த நபர், அவர்களிடம் இருந்த ஆயுதங்களால் தம்மை தாக்கிவிடுவதாக அஞ்சியதாகவும், பணம் மற்றும் பொருட்களை தராமல் அங்கிருந்து தப்ப முயன்றிருந்தால் அவர்கள் கொலை செய்திருக்க கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்களிடம் இருந்து தாம் நூலிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிசார், தற்போது மாயமான கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்