ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான மூன்று வாகனம்: நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

Altendorf நகராட்சியிலிருந்து Chur நகரம் நோக்கி கார் ஒன்று நேற்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

காரை 21 வயதான இளைஞர் ஓட்டிய நிலையில், சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு வேலியை கார் உரசியுள்ளது.

இதையடுத்து சாலைக்குள் காரை ஓட்டுனர் மீண்டும் இயக்க அருகில் வேகமாக வந்த வேன் மீது கார் மோதியது.

மோதிய வேகத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பக்க சாலையில் வந்து கொண்டிருந்த இன்னொரு கார் மீது மோதியுள்ளது.

இதில் காரில் இருந்த 52 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு கார் மற்றும் வேனில் இருந்த இரண்டு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், சாலையில் இருந்த பனிக்கட்டிகளில் கார் ஏறியதால் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

விபத்தை தொடர்ந்து இரவு 9 மணி வரை குறித்த சாலை மூடப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்