ஞானலிங்கேச்சுரத்தில் கேதாரகௌரி மற்றும் தீபத்திருநாள் தீபாவளி வழிபாடுகள்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
64Shares
64Shares
lankasrimarket.com

அருள் ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கேதாரகௌரி மற்றும் தீபத்திருநாள் தீபவளி வழிபாடுகள் மிகு சிறப்புடன் நடைபெற்றது.

தீபாவளிப் பண்டிகையின் தோன்றியானட கதை பாரதக்கண்டத்தில் வடக்கு முதல் தெற்கு வரை பல்வேறுகருத்துக்களுடனும், பல் புராணங்களுடனும் பலவேறுபட்ட முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

எண் சமயத்தவர்களும் தத்தமது கருத்துக்களை முன்மொழிந்து புராணத்தைப் பரப்பி ஒழுகி வருகிறார்கள்.

சத்தியவேல் முருகனார் அவர்கள் தமிழர்கள் தம் முன்னோரை வழிபட்டு நீத்தார் கடன் அளிக்கும் சிறப்புக் காலம் இதுவென்றும், சிவபெருமானைப் பிரிந்து 9 இரவுகள் சக்தி உலகத்தைப் படைத்தளித்து, பின் 21 நாட்கள் கௌரிநோன்பு நோற்று ஞானலிங்கேச்சுரரின் ஒருபாகமான விழாக்காலம் நிறையும் வேளை தீபாவளி எனும் விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

திருமால்வழிபாடும் தமிழர் வழிபாடே. ஆகப் புராணக் கதைகளின் விளக்கத்தினைத்தாண்டி தீயன அழிந்து, நல்லன சிறக்கும் விழாவாகவும், இருள் ஒழிந்து ஒளி பெருகும் விழாவாகவும் தீபத்திருநாள் நோக்கப்படுகிறது.

18. 10. 2017 புதன்கிழமை மாலை 16.30 மணிமுதல் சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் ஞானலிங்கேச்சுரத்தில் கரிமுகக்கடவுளுக்கு சிறப்பு வழிபாடுகளும், கௌரிவழிபாடும், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரரிற்கு பல் சிறப்பு கூட்டுவழிபாடுகளும் நடைபெற்றது.

திருமகள் உடனாய திருமால் திருநடைவலம்வந்து நிறைவில் அருளுணவு அளித்து விழா நிறைவடைந்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்