பாலியல் துன்புறுத்தலை தடுக்க சுவிஸில் வரும் புதுத்திட்டம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸின் Winterthur நகரில் உள்ள இரவுவிடுதிகள், பார்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளிலிருந்து தப்பிக்க குறியீட்டு வார்த்தைகள் அறிமுகப்படுத்தபடவுள்ளன.

சுவிட்சர்லாந்தின் Winterthur நகரில் பல இடங்களில் மதுபான பார்கள், இரவுவிடுதிகள் செயல்படுகின்றன.

இங்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் நடந்துவருகிறது. இதை தடுக்க நகரில் உள்ள பார்களில் இனி புதிய விடயம் மேற்கொள்ளப்படும்.

அதாவது, பாதுகாப்பற்ற மற்றும் சங்கடமான சூழலை பெண்கள் உணர்ந்தால் அங்குள்ள ஊழியர்களிடம் சென்று ‘Is Luisa there?’ என்ற வார்த்தைகளை பாதிக்கப்பட்டவர்கள் சொல்ல வேண்டும்.

இதையடுத்து குறித்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் மற்றும் வாகனத்தில் பாதுகாப்பான இடத்துக்கு அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.

பெண்கள் கழிவறையில் இந்த குறியீடு குறித்து விளக்கப்படும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளது, Winterthur நகரம் தான் முதல்முதலாக இந்த திட்டத்தை சுவிட்சர்லாந்தில் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்