சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் அகதி: குடும்பமே கதறும் சோகம்

Report Print Shalini in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

சுவிஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்ரமணியம் கரனின் குடும்பம் கதறியழும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான கரன் சுவிற்சர்லாந்தில் கடந்த ஏழாம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்தார்.

advertisement

2015ஆம் ஆண்டு தஞ்சம் கோரி சுவிஸிற்கு சென்ற கரன் கடந்த இரண்டு வருடங்களாக டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சுவிஸ் நாட்டு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் தலத்திலேயே பலியாகியிருந்தார்.

இந்த சம்பவம் இலங்கையை சேர்ந்த பலரது மனதிலும் சோகத்தையும், பல்வேறு கேள்விகளையும் உருவாக்கியிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியிருந்தது.

அதில், பொலிஸார் கரன் தங்கியிருந்த முகாமிற்கு வந்த போது பொலிஸாரின் கட்டளைக்கு குறித்த நபர் கீழ்ப்படியாத நிலையில் இவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தமது தந்தை இங்கு இருக்கும் போதும் பாரதூரமான எந்தவிதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் எனவும், சுட்டுக்கொல்லும் அளவுக்கு தமது தந்தை எந்தவொரு பிழையும் செய்திருக்க மாட்டார் என பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கரனின் குடும்பத்தால் அவரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறியழும் காட்சி பதிவான காணொளியானது வெளியாகியுள்ள நிலையில் அனைவரது மனதையும் உருக வைத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்