திருவிழா நிகழ்ச்சியில் தீயில் குதித்து உயிரிழந்த சுவிஸ் குடிமகன்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
517Shares
517Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் திருவிழா நிகழ்ச்சி ஒன்றில் தீயில் குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நவடா மாகாணத்தில் Burning Man என்ற திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

மரக்கட்டைகளால் செய்யப்பட்ட கட்டிடத்தின் மையத்தில் மனித உருவில் பொம்மையை செய்து அதனை தீவைத்து எரிப்பார்கள்.

மனிதர்களுக்கு மறுபிறவி இருக்கிறது என நம்பும் வகையில் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று திருவிழா தொடங்கியதும் பொம்மைக்கு தீவைத்து எரிக்கப்பட்டது.

அப்போது, பாதுகாப்பு வளையத்தை தாண்டிய நபர் ஒருவர் திடீரென நெருப்பில் குதித்துள்ளார்.

நபர் மீது தீ பரவிய அதே நேரம் மரக்கட்டைகளும் எரிந்து சரிந்துள்ளன. இதனால் நபரை விரைவாக காப்பாற்ற முடியவில்லை.

சில நிமிடங்களுக்கு பின்னர் முற்றிலும் எரிந்த நிலையில் நபர் ஹெலிகொப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.

மேலும், தீயில் குதித்தபோது நபர் மது அருந்திருக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியபோது தீயில் குதித்து உயிரழந்த நபர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்தவர் எனவும், அவருக்கு 41 வயதிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், எதற்காக தீயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்