சுவிஸில் இலங்கை குடிமகன் மீது தாக்குதல்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் கோரி காத்திருக்கும் இலங்கை குடிமகன் மீது எரித்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Brugg ரயில் நிலையத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 41 வயதான நபர் மற்றும் இலங்கையை சேர்ந்த 34 வயதான நபர் ஆகிய இருவரும் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று இருவர் மீது மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இருவருக்கும் மண்டை உடைத்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். தாக்குதல் நடத்திய 4 பேரில் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எரித்திரியா நாட்டை சேர்ந்த மூவருக்கும் 19 முதல் 25 வயதிருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து விரிவான தகவலை வெளியிடாத பொலிசார் மூவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்