பல்சமய இல்லத்தில் சிறப்புத் திரையில் அஜர்பஜான் நாட்டின் ஆவணப்படம்!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

அஜர்பஜான் நாடு பேர்ன் நகரில் அமைந்திருக்கும் பல்சமய இல்லத்தை ஊக்கமூட்டும் நோக்கிலும், சுவிற்சர்லாந்தில் தமது அடையாளத்தை விளக்கும் நோக்குடனும் அஜர்பைஜான் தூதராலயம் இன்று (28) ஓர் சிறப்பு நிகழ்வினை பல்சமய இல்லத்தில் நடத்தியுள்ளது.

இந்த நிகழ்வில், பல நாட்டு தூதுவர்களும், பல்சமய இல்லத்தின் பங்காளர்களும் சிறப்பாகத் தெரிவுசெய்யப்பட்ட விருந்தினர்களும் பங்கு பற்றியுள்ளனர்.

advertisement

இதேவேளை, இன்று (28) நண்பகல் 02.00 மணிமுதல் அரும்பொருட்காட்சியும், கண்காட்சியும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பல்சமய இல்லத்தில் சிறப்புத் திரையில் அஜர்பஜான் நாட்டின் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.

பழைய பெரும் ரஷ்யப் பேரரசில் இருந்து 1991ஆம் ஆண்டு தனிநாடாகப் பிரிந்து இன்று எண்ணைவளம் மற்றும் எரிவாயு மிகுந்து செல்வச் செழிப்புடன் விளங்குகின்றது.

அஜர்பர்ஜானில் இருந்து வருகையளித்திருந்த சிறப்பு விருந்தினர்களும், தூதராலய பணியாளர்களும் பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலை வந்து கண்ணுற்றுள்ளனர்.

சிறப்பாக ஒழுங்குசெய்யப்பட்டு திருக்கோவிலும் சைவநெறிக்கூடத்தின் பணிகளும் அவர்களுக்கு ஞானலிங்கேச்சுரர் திருகுகோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமாரினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சைவ நெறிக்கூடத்தால் கடந்த 19ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட தமிழர் களறியின் பணியாக "இலங்கையின் பூர்வீகக்குடிகள் தமிழர்கள்" எனும் ஆங்கில நூல் அஜர்பஜான் நாட்டுத்தூதுவருக்கும், அதுபோல் இஸ்ரேல் நாட்டுத்தூதுவருக்கும் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

மேலும், நிறைவில் தூதராலயத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட விருந்து நடைபெற்று நிகழ்வுகள் 08.00 மணிக்கு நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments