சுவிற்ஸர்லாந்து சிவன் கோவிலில் திருவள்ளுவர் வழிபாடு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்ஸர்லாந்திலுள்ள சிவன் கோவிலில் திருவள்ளுவர் திருவழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த வழிப்பாடுகள் சுவிற்ஸர்லாந்து திருவள்ளுவர் சித்தர்களின் அமைவிடத்தில் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாலை 7.30 மணிமுதல் 9.00 வரை நடைபெறுகின்றன.

பேர்ண்வள்ளுவன் பாடசாலை மாணவர்களும், திருவழிபாட்டு குருக்கள்மாரும் இணைந்து திருவள்ளுவர் உருவச்சிலைக்கு திருவழிபாடுகளை நடத்தினர்.

பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் மாணவிகள் கொடிகுடை, ஆலவட்டம் முதலானவற்றையும் தீப வழிபாடுகளையும் நிகழ்த்தினர்.

திருவள்ளுவர் உருவச்சிலையினை தேரில் ஏற்றி கருவறையைச் சுற்றி வலம்வந்தனர். மாணவ மாணவிகள் திருக்குறள் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அடியார்களும் மாணவர்களும் திருவள்ளுவருக்கு மலரிட்டு வழிபட்டனர்.

இதில் பேர்ண்வள்ளுவன் பாடசாலையின் முதல்வர் உரையாற்றுகையில்,

திருக்குறளில் திருவள்ளுவரின் பெருமைகளை எம் தமிழ் மக்கள் முழுமையாக உணராமல் உள்ளர்கள்.

திருக்குறள் படித்தால் தமிழ் படித்ததாகவும், தமிழில் இலக்கணம் படித்ததாகவும், இலக்கியம் படித்ததாகவும், சமயம் படித்ததாகவும் அமையும். அந்த அளவிற்கு ஆழமாக திருக்குறளை படிப்பவர்கள் குறைந்தளவினரே.

தமிழை ஆழமாக படித்தால் அவர்கள் நல்லவர்களாக அறிவாளிகளாக மகிழ்ச்சியாக வாழலாம்.

தமிழை மரபுசார் கல்வி முறையில் கற்காமையும், கற்பிக்காமையும் தமிழின் தாழ்ச்சிக்கு காரணமாகின்றது என்றும், திருக்குறள் தமிழரை ஈடேற்றக்கூடிய நுால், உலக மக்களையும் ஈடேற்றக்கூடிய நுால், அதனை நாம் சரியாக முழுமையாக பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்றுரைத்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments