இலங்கையில் செயல்படும் உலகின் காலியான விமானநிலைய விவகாரம்: இந்தியா அதிரடி முடிவு

Report Print Raju Raju in இலங்கை
319Shares
319Shares

இலங்கையில் நஷ்டத்தில் செயல்படும் விமானநிலையம் ஒன்றை ஏற்று நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

கொழும்புவிலிருந்து 241 கி.மீட்டர் ஹம்பந்தோட்டா நகரில் உள்ளது மட்டல ராஜபக்சா சர்வதேச விமானநிலையம்.

கடந்த 2013ல் சீனா வழங்கிய கடன் மூலம் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் போதிய விமானங்கள் இயக்கப்படாததால் உலகிலேயே 'காலியான விமான நிலையம்' என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா கூறியுள்ளார்.

இந்தியா இலங்கை கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில், இந்த விமான நிலையத்தை இந்தியா எடுத்து நடத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்