உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த இலங்கை! காரணம் என்ன?

Report Print Vethu Vethu in இலங்கை
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

2017 ஆம் ஆண்டில் 20 வெப்பமான ஆடம்பர சுற்றுலா தளங்களில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் (Bloomberg) வணிக ஊடக கூட்டமைப்பின் பட்டியலுக்குள்ளேயே இவ்வாறு இலங்கையும் இணைந்துள்ளது.

advertisement

இலங்கையில் உச்ச பருவத்தில், சராசரி ஆடம்பர விடுதிக் கட்டணம் குறைந்த வரம்பிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது மடகாஸ்கர், கொலம்பியா, பெரு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளே குறித்த பருவத்தில் குறைந்த கட்டண வரம்பை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கை குறித்து ப்ளூம்பெர்க் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் குறைவான அளவு ஆடம்பர ஹோட்டல் தேர்வுகளே உள்ளமை மற்றும், தற்போது அங்கு உள்ளூர் தொழில் பயிற்சியாளர்களை நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் ப்ளூம்பெர்க் அவதானித்துள்ளது.

சுற்றுலா அதிகாரிகள் 2.2 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்த போதிலும், 2016ஆம் ஆண்டு இலங்கை 2 மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments