ரூ.2.44 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்: இலங்கையில் இருந்து கடத்தப்பட்டதா?

Report Print Deepthi Deepthi in இலங்கை
0Shares
0Shares
lankasri.com

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூ.2.44 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் இருந்து ரூ.2.44 கோடி மதிப்பிலான 8 கிலோ 700 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இதில், காரை ஓட்டி வந்த முஜிபுர் ரகுமான் என்பவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து புலானாய்த்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிடிபட்ட தங்கக்கட்டிகள் இலங்கையிலிருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக ஒரு மாதத்திற்கு முன்பே படகில் கடத்தி வரப்பட்டு, கடத்தல்காரர்களால் முஜிபுர் ரகுமானிடம் ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை காரில் மதுரை கடத்திச் செல்லும்போது இந்தத் தங்கக்கட்டிகள் அதிகாரிகளிடம் சிக்கியிருக்கின்றன.

சில நேரங்களில் அதிகாரிகளால் கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும், கடலில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் அரசு ஏஜென்சிகளிடையே தொய்வு ஏற்பட்டுள்ளதால், இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்துவதும், இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதும் தொடர்வதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments